search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை செயல் அதிகாரி"

    • 2022 மார்ச் மாதம் இரவு விருந்தில் இருவரும் சந்தித்து கொண்டனர்
    • அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது

    உலகின் முன்னணி இணையவழி சமூக கருத்து பரிமாற்ற வலைதளமாக இருந்து வந்த டுவிட்டரை, உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் 2022-ல் சுமார் ரூ. 37 ஆயிரம் ($44 பில்லியன்) கோடிக்கு விலைக்கு வாங்கினார்.

    2022 மார்ச் மாதம் அதன் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த பராக் அக்ரவால் எனும் இந்திய-அமெரிக்கரை ஒரு இரவு நேர விருந்தில் எலான் மஸ்க் சந்தித்தார்.

    2022 அக்டோபர் மாதம் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், முதல் வேலையாக பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தார்.

    டுவிட்டர் வலைதளத்தின் லாபத்தை பெருக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போது வரை எடுத்து வரும் மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றம் செய்திருக்கிறார். அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் வாழ்க்கை சரிதத்தை வால்டர் ஐசக்ஸன் என்பவர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் வரும் வாரங்களில் வெளியிடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த புத்தகத்தில் பராக் அக்ரவாலை, எலான் மஸ்க் நீக்கியதற்கான காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மஸ்க், பராக் அகர்வால் குறித்து என்ன நினைத்தார் என வால்டர் எழுதியுள்ளார். "அக்ரவால் ஒரு 'நல்ல மனிதர்.' ஆனால், ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு 'நல்ல மனிதர்' எனும் குணம் மட்டும் போதாது. மக்களால் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி விரும்பப்பட வேண்டும் எனும் அவசியமில்லை. நெருப்பை உமிழும் டிராகனை போல் உள்ள ஒரு தலைமை தான் டுவிட்டருக்கு தேவை. அந்த குணம் பராக் அக்ரவாலிடம் இல்லை," இவ்வாறு மஸ்க் கருதியதாக வால்டர் ஐசக்ஸன், மஸ்கின் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

    கடந்த அக்டோபரில் பராக்கை பணிநீக்கம் செய்த மஸ்க், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தானே அந்த பொறுப்பை வகித்து வந்தார்.

    2023 ஜூன் மாதம், விளம்பர துறையில் வல்லவரான லிண்டா யாக்கரினோ எனும் பெண்மணியை நியமித்த பிறகு மஸ்க் அந்த பொறுப்பில் இருந்து விலகி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன்-லைன் வர்த்தகத்தில் புகழ் பெற்ற ‘பிளிப்கார்ட்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து பின்னி பன்சால் விலகி உள்ளார். #Flipkart #CEO #BinnyBansal #Resign
    புதுடெல்லி:

    பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007-ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இது ஆன்-லைன் வர்த்தகம் என்று சொல்லப்படுகிற இணையவழி வர்த்தகத்தில் புகழ் பெற்றது.

    சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை அமெரிக்க ஆன்-லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற ‘வால்மார்ட்‘ நிறுவனம் வாங்கியது.



    இந்த நிலையில் திடீரென ‘பிளிப்கார்ட்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து பின்னி பன்சால் விலகி உள்ளார். உடனடியாக அவரது ராஜினாமா அமலுக்கு வந்துள்ளது.

    இதுபற்றி வால்மார்ட் விடுத்துள்ள அறிக்கையில், “பின்னி பன்சால் மீது தனிப்பட்ட தவறான நடத்தை புகார்கள் எழுந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மீதான புகார்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த விவகாரமும் கவனத்தை சிதறடித்து விடும் என கருதி அவர் விலகி உள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

    பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Online #Flipkart #CEO #BinnyBansal #Resign
    12 ஆண்டுகளாக பெப்சி குழும நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #Pepsi #IndraNooyi
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் குளிர்பான சந்தையில் கொடி கட்டி பறக்கும் பெப்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    பெப்சி நிறுவன இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தலைவராக உள்ள லாகுவார்டா புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லாகுவார்டா வரும் அக்டோபர் மாதம் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

    கடந்த 24 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திரா நூயி, அடுத்தாண்டு வரை தலைவர் பொறுப்பில் தொடருவார் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த இந்திரா நூயி, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், கடந்த 2014-ம் ஆண்டு போர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13-வது இடத்திலும், 2015-ம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. 
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். #JamesSutherland #CricketAustralia #CEO
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் இன்று தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்த ஜேம்ஸ் சதர்லெண்ட் 2001-ம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரி பதவி வகித்து வந்தார்.

    இது தொடர்பாக சதர்லெண்ட் கூறியதாவது:-

    20 ஆண்டு காலமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் இருந்துள்ளேன். இதுதான் சரியான தருணம். பதவி விலகல் முடிவில் நான் மிகவும் சவுகரியமாக இருக்கிறேன். இது எனக்கு சரியாக நேரம் என்றார். புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அப்பதவியில் சதர்லெண்ட் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையை சதர்லெண்ட் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #JamesSutherland #CricketAustralia #CEO
    ×